வியாழன், 18 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Webdunia

சென்னை பாக்ஸ் ஆபீஸ்-இவன் வேற மாதிரி-நம்பர் 1

சென்னை பாக்ஸ் ஆபீஸ்-இவன் வேற மாதிரி-நம்பர் 1
5. அச்சம் தவிர்
FILE

சரத்குமார் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் அச்சம் தவிர். போஸ்ட் புரொடக்ஷன் முடிந்து பெட்டிக்குள் இருந்த படம் ஒருவழியாக வெளியாகியிருக்கிறது. சென்ற வாரம் வெளியான படம் முதல் மூன்று தினங்களில் 4.94 லட்சங்களை மட்டும் வசூலித்துள்ளது.

4. நவீன சரஸ்வதி சபதம்
சென்னை பாக்ஸ் ஆபீஸ்-இவன் வேற மாதிரி-நம்பர் 1
FILE

மீடியம் பட்ஜெட்டில் தயாரான படம் தயாரிப்பாளருக்கு லாபத்தை சம்பாதித்து தந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 2.94 கோடிகள் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 7.5 லட்சங்கள். வார நாட்களில் Nல் 23.2 லட்சங்கள்.

3. தகராறு
சென்னை பாக்ஸ் ஆபீஸ்-இவன் வேற மாதிரி-நம்பர் 1
FILE

அருள்நிதி நடித்திருக்கும் தகராறு சென்ற வார இறுதியில் 7.9 லட்சங்களையும், வார நாட்களில் 52 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.55 கோடி.
2. கல்யாண சமையல் சாதம்
சென்னை பாக்ஸ் ஆபீஸ்-இவன் வேற மாதிரி-நம்பர் 1
FILE

இந்த காமெடிப் படம் சென்ற வார இறுதியில் 22.8 லட்சங்களையும், வார நாட்களில் 33 லட்சங்களையும் வசூலித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 85.4 லட்சங்கள்.
1. இவன் வேற மாதிரி
சென்னை பாக்ஸ் ஆபீஸ்-இவன் வேற மாதிரி-நம்பர் 1
FILE

சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் இவன் வேற மாதிரி நல்ல ஆக்ஷன் படம் என்ற விமர்சனத்தை பெற்றிருக்கிறது. முதல் மூன்று தினங்களில் 1.58 கோடியை Nலித்து தயாரித்தவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.