செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 10 ஏப்ரல் 2022 (09:18 IST)

சதீஷின் அடுத்த படத்துக்கு கமலின் ஹிட் பட தலைப்பு… சிம்பு வெளியிட்ட போஸ்டர்!

நடிகர் சதீஷ் நடிப்பில் சமீபத்தில் நாய் சேகர் என்ற படம் வெளியானது. அதையடுத்து அவர் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் கவனிக்கப்பட்ட நகைச்சுவை நடிகராக வளர்ந்துவரும் சதீஷ் இப்போது கதாநாயகனாகவும் நடிக்கத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் அவர் நடிப்பில் நாய் சேகர் என்ற நகைச்சுவை திரைப்படம் வெளியானது. அதையடுத்து சன்னி லியோனோடு அவர் நடிக்கும் OMG என்ற படம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. இதையடுத்து அவர் மீண்டும் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.

க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்” படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார்.

1978 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் சட்டம் என் கையில் என்ற பெயரில் வெளியான படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.