புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 22 ஜூலை 2020 (11:34 IST)

ஐபிஎல் 2020 vs விஜய்யின் மாஸ்டர்? ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி!

இந்த ஆண்டு ஐபில் போட்டிகள் தள்ளிப்போயுள்ள நிலையில் தீபாவளி சமயத்தில் அவை நடக்கலாம் என செய்திகள் வெளியாகின்றன.

தமிழ் ரசிகர்கள் இந்த ஆண்டு சம்மரில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் ஐபிஎல் போட்டிகள் என இரட்டை சந்தோஷத்தை இழந்துள்ளனர். கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை இந்த ஆண்டு இறுதியில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

அதே போல சம்மருக்கு ரிலீஸ் ஆகவேண்டிய மாஸ்டர் திரைப்படமும் தீபாவளிப் பண்டிகையை குறிவைத்துள்ளது. இதனால் இந்த ஆண்டு தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷமாக மாஸ்டர் திரைப்படமும் ஐபிஎல் தொடரும் காணக்கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.

ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.