வெள்ளி, 11 அக்டோபர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 2 அக்டோபர் 2024 (09:34 IST)

ரஜினிகாந்த் உடல்நிலையை லதாவிடம் விசாரித்த பிரதமர் மோடி.. அண்ணாமலை தகவல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து லதா ரஜினிகாந்த் அவர்களிடம் பிரதமர் மோடி விசாரித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்பட பலர் தங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, லதா ரஜினிகாந்த் அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விசாரித்ததாகவும், அவரிடம் ரஜினிகாந்த் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் தெரிவிக்கப்பட்டதாகவும், இதனை அடுத்து ரஜினிகாந்த் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி கூறியதாகவும், அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Edited by Siva