இது என்னடா புது வில்லங்கம்? இந்த கேள்வியுடன்தான் உள்ளே வந்திருப்பீர்கள். நீங்கள் நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. இந்த அடிதடி புதிய படத்துக்காக.
FILE
காதல் தோல்விக்குப் பின் நடிக்க வந்த நயன்தாராவுக்கு முதலிரு தெலுங்குப் படங்களும் தோல்வியாக அமைந்தது. அனாமிகாவும் வெளியானால் தெலுங்கை பொறுத்தவரை நயன்தாராவுக்கு நில் போலன்ஸ்.
இந்நிலையில் கோபிசந்த் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. பி.கோபால் இயக்க, ஜெயபாலாஜி ரியல் மீடியா படத்தை தயாரிக்கிறது. இசை மணிசர்மா.
FILE
இந்தப் படத்தில்
பில்லா ஸ்டைலில் ஆக்ஷன் அடிதடியெல்லாம் இருக்கிறதாம் நயன்தாராவுக்கு. பில்லாவில் ஆக்ஷனைவிட ஸ்டைல் கொஞ்சம் ஜாஸ்தி. இதில் அப்படியே உல்டா. விஜயசாந்தி கணக்கில் அடித்து நொறுக்கயிருக்கிறாராம்.
FILE
நயன்தாராவின் அடிதடியை தமிழகம் பார்த்து ரசிக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் படத்தை தெலுங்கு, தமிழில் ஒரே நேரத்தில் எடுக்கிறார்கள்.