வீட்டிலேயே எளிதான முறையில் ரசகுல்லா செய்ய !!

தேவையான பொருட்கள்: 
 
பால் - 1/2 லிட்டர் 
எலுமிச்சை சாறு - 1 1/2 டேபிள் ஸ்பூன் 
ஐஸ் கட்டி - 3
சர்க்கரை - 150 கிராம்
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
பிஸ்தா - 2

செய்முறை: 
 
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஓரளவு சுண்டக் காய்ச்சவும். அடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து பாலை திரியும் வரை கிளறவும். அடுத்து பாலில் ஐஸ் கட்டிகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து ஒரு வெள்ளைத் துணியில் போட்டு நன்கு வடிகட்டிக் கொள்ளவும்.
 
அடுத்து திரிந்த பாலை ஒரு பாத்திரத்தில் போட்டு உருண்டைகளாகப் பிடித்துக் கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சர்க்கரை, ஏலக்காய்த் தூள் சேர்த்து பாகுபோல் காய்ச்சவும். அடுத்து உருண்டையினை அதில் போட்டு ஊறவிட்டு அடுத்தநாள் சாப்பிட்டால் ரசகுல்லா ரெடி.

எல்லாம் காட்டு

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments