வாழைப்பழ பாயாசம்

Mahalakshmi| Last Modified வியாழன், 11 ஜூன் 2015 (09:30 IST)
தேவையான பொருட்கள்:


அரிசி : 100 கிராம்
சர்க்கரை : 200 கிராம்
தேங்காய் : 1/2
ஏலக்காய் : 5
முந்திரி : சிறிதளவு
மஞ்சள் வாழைப்பழம் : 2 (மிக சிறிய துண்டாக நறுக்கியது)

செய்முறை:


அரிசியை நன்றாக சுத்தம் செய்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியையும் தேங்காயையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த அரிசி, தேங்காய் கலவை அடுப்பில் வைத்து கிளறவும். அடுப்பை மிக சிறியதாக எரியவிடவும்.

மாவு பிரியாமல் சேர்த்து கொதித்து அரிசி கலவை நன்றாக வேக வேண்டும். எல்லாம் சேர்ந்து கொதித்தபின் வாழைப்பழத்தை போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும். நெய்யில் வறுத்த முந்திரியையும், ஏலக்காய் தூளையும் போட்டு இறக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :