கொழுக்கட்டை

Mahalakshmi| Last Modified செவ்வாய், 2 ஜூன் 2015 (11:59 IST)
தேவையான பொருட்கள் :

புழுங்கல் அரிசி - 1/4 கிலோ
சர்க்கரை - 100 கிராம்
தேங்காய் துருவியது - 1 மூடி
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
பால் - 3 டீஸ்பூன்
ஏலக்காய் - 2 பொடி செய்யவும்
செய்முறை :

புழுங்கல் அரிசியை நன்றாக ஊறவைத்து மைபோல கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அந்த மாவில் பால், சர்க்கரை, நெய், தேங்காய்த்துருவல், ஏலப்பொடி சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, கையில் வைத்துக் கொழுக்கட்டையாகப் பிடித்துக் கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தின் தட்டில் எண்ணெய் தடவி, பிடித்து வைத்துள்ள கொழுக்கட்டைகளை அதில் வைத்து இட்லிபோல ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.


இதில் மேலும் படிக்கவும் :