கேரட் அல்வா

Mahalakshmi| Last Modified திங்கள், 8 ஜூன் 2015 (09:21 IST)
தேவையான பொருட்கள்:

1/4 கிலோ கேரட்
1 கப் சர்க்கரை
3 தே‌க்கர‌ண்டி நெய்
1 கப் தண்ணீர்
ஒரு சிட்டிகை கேசரி பொடி
4 ஏலக்காய்
10 வறுத்த முந்திரி

செய்முறை:

முதலில் கேரட்டை நன்றாக துருவி கொள்ள வேண்டும். பின்னர் ஏலக்காயை பொடியை தயார் செய்து கொள்ளுங்கள். பவுல் அடியில் நெய் தடவி கொள்ளுங்கள்.

துருவிய கேரட், ஏலக்காய் பொடி, சர்க்கரை, தண்ணீர், கேசரி பொடி, முந்திரி, நெய் அனைத்தையும் ஒன்றாக கலந்து மைக்ரோவேவில் பவுல்-ல் 10 நிமிடம் high(HI)-யில் வைக்கவும்.

இடையில் ஒன்றிரண்டு முறை கலவையை கலக்கவும்.

மைக்ரோவேவ் கேரட் அல்வா ரெடி.

ஒவ்வொரு மைக்ரோவேவிற்கும் நேரம் வித்தியாசப்படலாம், ஒன்றிரண்டு முறை செய்து பார்த்தால் சரியாக வரும்.


இதில் மேலும் படிக்கவும் :