1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அ‌றிவோ‌ம்
Written By சுரேஷ் வெங்கடாசலம்
Last Updated : புதன், 16 மார்ச் 2016 (13:30 IST)

மக்கள் மீது காதல் கொள்வது எப்படி? : மக்ஸிம் கார்க்கி

உலகின் தலைசிறந்த எழுத்தாளர்கனின் முதல் வரிசையில் முன் நிற்பவர் மக்ஸிம் கார்க்கி. உலகொங்கும் வாழும் கோடான கோடி மக்களின் அன்பைப் பெற்றவர்.


 


அவர் எழுதிய "தாய்" நாவல், எழுதப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மோல் ஆனபோதும் மக்கள் அதை தொடர்ந்து படித்து, கொண்டாடி வருகின்றனர்.
 
இதேபோல, ஏராளமான அவரது படைப்புகள் மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றது.

சோவியத் இலக்கியத்தின் வழிகாட்டியாகவும், முன்னோடியாயும் திகழ்ந்தவர், சோஷலிச எதார்த்தவாதம் என்ற கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர் கார்க்கி.
 
மக்களுக்கான இலக்கியங்களைப் படைத்த கார்க்கி மக்களின் தவறான மனபான்மையை என்றுமே ஆதரித்ததில்லை.
 
அந்த வகையில் மக்கள் மீது காதல் கொள்வது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
 
"காதல் என்ற சொல்லின் பொருள் என்ன? இசைதல், பரிவு காட்டுதல், பொருட்படுத்தாமை, மன்னித்தல் ஆகிய பொருள்கள் அந்த சொல்லுக்கு உண்டு.
 
ஒரு பெண்ணை காதலிக்கும்போது இது முற்றும் பொருந்தியதாக இருக்கலாம். ஆனால் ஜனங்களைப் பொருத்தவரை இது பொருந்தவா செய்யும்? ஜனங்களுக்குள்ள அறியாமையை நாம் பொருட்படுத்தாமல் இருக்கலாமா? 
 
அவர்களின் மயக்க நிலைக்கு நாம் இசைந்து போகலாமா? அவர்களின் கீழ்மை குணத்திற்கு பரிவு காட்டலாமா? அவர்களின் விலங்கு மனப்பான்மையை நாம் மன்னிக்கலாமா? இவற்றை எல்லாம் நாம் செய்யலாமா?
 
கூடாது...?"
- மக்ஸிம் கார்க்கி 
(யான் பயின்ற பல்கலைக் கழகங்கள் என்ற நூலிலிருந்து...)
 
இது போன்ற பல்வேறு கண்ணோட்டங்கள்தான் மக்ஸிம் கார்க்கியின் படைப்புகளுக்கு அடிப்படையாக அமைந்தது.
 
மக்களின் அறியாமை, கீழ்மை குணத்தை எதிர்த்தும், மக்களுக்கு எதிராக செயல்பட்ட அரசாங்கத்தின் மீதும் கடுமையான எதிர்ப்பையும், உறுதியான போராட்டங்களையும் தனது வாழ்நாள் எல்லாம் நிகழ்த்தியவர் கார்க்கி. 
 
மக்ஸிம் கார்க்கி (1868-1936) பிறந்தநாள் (மார்ச் 16) இன்று.