சனி, 28 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Updated : திங்கள், 4 ஜூலை 2016 (11:09 IST)

சமூகசேவை எனக்கு உயிர் மூச்சு மாதிரி - சமந்தா பேட்டி

சமூகசேவை எனக்கு உயிர் மூச்சு மாதிரி - சமந்தா பேட்டி

எனக்கொரு காதலர் இருக்கிறார், அவர் ஒரு இளம் நடிகர் என்று ஏன் பேட்டியளித்தோம் என இப்போது வருத்தப்படுகிறார் சமந்தா.


 


அவரை யார், எங்கு சந்தித்தாலும் காதலை குறித்தும், அவரது திருமணத்தை குறித்தும்தான் கேட்கிறார்கள். சமீபத்தில் ஹைதராபாத்தில் அவர் அளித்த பேட்டியின் தமிழ் வடிவம் உங்களுக்காக.
 
கோடை விடுமுறை எப்படி போனது?
 
எனக்கு ரசிகர்களின் அன்பு, ஆதரவால் படங்கள் குவிகிறது. ஓய்வு இல்லாமல் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன். ஒரு படத்தை முடித்ததும் அடுத்த பட வேலைகளை தொடங்கி விடுகிறார்கள். கோடையில் கூட விடுமுறை இல்லை. நடித்துக் கொண்டுதான் இருந்தேன்.
 
சமீபத்தில் வெளியான படங்கள் திருப்தி அளிப்பதாக இருந்ததா?
 
சமீபத்தில் நான் நடித்த தெறி, 24 படங்கள் திரைக்கு வந்தன. இரண்டுமே வெற்றி பெற்றுள்ளன. தெலுங்கில் பிரமோற்சவம். மூன்று படங்களுமே எனக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தன.
 
என்ன மாதிரியான கதைகளை எதிர்பார்க்கிறீர்கள்?
 
காதல் கதைகளில் நடித்து அலுத்து விட்டது. ரசிகர்களும் அது போன்ற படங்களில் தொடர்ந்து நடிப்பதை விரும்ப மாட்டார்கள். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வித்தியாசமான கதையம்சம் உள்ள திகில் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அது மாதிரியான கதைகளை தேடுகிறேன்.
 
கன்னடத்தில் ஒரு படம் நடிக்கிறீர்களே...?
 
கன்னடத்தில் கதாநாயகன் இல்லாத கதையம்சம் உள்ள படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை உடனே ஒப்புக் கொண்டேன்.
 
நடிப்புடன் சமூக சேவைகளில் ஈடுபடுகிறீர்களே, அது உங்கள் ஹாபியா?
 
சமூக சேவை எனது உயிர் மூச்சு மாதிரி. ஆத்ம திருப்திக்காக சமூக சேவைகளில் ஈடுபடுகிறேன். விரைவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி சமூக சேவை பணிகளுக்கு நிதி திரட்ட இருக்கிறேன்.
 
எல்லா இடங்களிலும் உங்களின் திருமணம் குறித்தே பேச்சாக இருக்கிறதே?
 
நான் ஒருவரை காதலிக்கிறேன் என்றும் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறி இருந்தேன். இதனால் மாப்பிள்ளை யார் என்று என்னிடம் கேள்வி கேட்டு நச்சரித்து விட்டார்கள். இணையதளங்களிலும் எனது திருமணம் பற்றிய செய்திகளே பரவி கிடக்கின்றன.
 
திருமணம் எப்போது? மாப்பிள்ளை யார்?
 
உடனடியாக திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணத்துக்கு தயாரானதும் மாப்பிள்ளை யார் என்ற விவரத்தை தெரிவிப்பேன்.