வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : திங்கள், 26 ஜனவரி 2015 (13:14 IST)

ஷமிதாப் என்னைப் பொறுத்தவரை இளையராஜா சார்தான் - தனுஷ் பேட்டி

அடுத்த மாதம் ஷமிதாப் வெளியாவதை முன்னிட்டு சத்யபாமா பல்கலைக்கழகத்தில் படத்தின் அறிமுக விழா நடந்தது. பால்கி, அக்ஷராவுடன் தனுஷும் கலந்து கொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தனுஷ் அளித்த பதில்கள் உங்களுக்காக.
இந்திப் படவுலகில் நுழைந்தது பற்றி சொல்லுங்க?
 
இந்தியில் பர்ஸ்ட் டைம் ஒரு நல்ல மனிதரை இயக்குனரை சந்திச்சேன். ஆனந்த் எல்.ராய். ஒரு நல்ல கதையோட வந்து மீட் பண்ணுனார். அவர் எங்கிட்ட, நீங்க படம் பண்ணணும்னு சொன்னப்போ, யார்ரா இந்த ஆளு, அங்கயிருந்து இவ்வளவு தொலைவு வந்து நம்மளை நடிக்க கேட்கிறார். அதுவும் அவர் சொன்ன பட்ஜெட் எல்லாம் இம்பாஸிபிள். கண்டிப்பா திரும்பி வரமாட்டார்னு கதை கேட்டு நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.
ஆனா, நீங்க நினைத்தது நடக்கவில்லை இல்லையா?
 
இரண்டு மூணு மாசம் ஆளைக் காணோம். அப்புறம் அவரே போன் செய்தார். அப்படிதான் ராஞ்சனா பண்ணினேன்.
 
ராஞ்சனாவுக்கு அப்புறம் ஏன் இந்த இடைவெளி?
ராஞ்சனாவுக்கு அப்புறமா வெயிட் பண்ணுனேன். நல்ல கதை வந்தா பண்ணலாம்னு. கிட்டதட்ட எய்ட் மந்த்ஸ். சில கதைகள் நல்லாயிருந்தாலும், அது நமக்கு சூட் ஆகாதுன்னு பண்ணலை. அப்போதான் பால்கி ஒருநாள் போன் செய்து, ஒரு புராஜெக்ட் விஷயமா பேசணும், மீட் பண்ணலாம் அப்படீன்னார். சரின்னு அவரை ஆபிஸ்ல சநதிச்சப்போ, ஒரு ஹலோவுக்கு அப்புறமா கடகடன்னு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டார். ஒரு இரண்டு மணிநேரம் கதை சொன்னார்.
 
மேலும் அடுத்த பக்கம்...

கதை கேட்டதும் என்ன நினைச்சீங்க?
 
கதை கேட்டபிறகு இவ்வளவு நாள் வெயிட் பண்ணுனது தப்பில்லைன்னு தோணிச்சு.
அமிதாப்புடனான சந்திப்பு, எக்ஸ்பீரியன்ஸ் எப்படி இருந்தது?
 
ஷமிதாப்ல அவரை முதல்முறை சந்திக்கலை. அவார்ட் பங்ஷன்ல அவருக்காக சின்ன ஒரு பெர்பாமென்ஸ் பண்ணுனேன். அப்போ அவரை மீட் பண்ணுனேன். ஷமிதாப்ல அவரை சந்திக்கும் போது நெர்வஸா இல்லை, பயங்கர எக்ஸைட்டா இருந்தது, பயங்கர த்ரில்லா இருந்தது. எனக்கு நிறைய இவர்கிட்ட கத்துக்கலாம், ஒரு ஷாட் ப்ரீயட்ல எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவர்கிட்ட கத்துக்கணும்ங்கிற எக்ஸையிட்மெண்டோடதான் போனேன்.
ராஞ்சனாவில் நிறைய டயலாக் பேசியிருந்தீங்க. ஆனா, ஷமிதாப் ட்ரெய்லரில் எந்த பேச்சையும் காணோம். படத்தில் டயலாக் இருக்கிறதா?
 
பக்கம் பக்கமா பேசியிருக்கேன். பார்ப்பீங்க.
 
உங்க கோ ஸ்டார் அக்ஷரா பத்தி சொல்லுங்க?
 
அவங்களுக்கு இது பர்ஸ்ட் ஃபிலிம் மாதிரி இல்ல. பெரிய கேரக்டர், ரொம்ப கஷ்டமான கேரக்டர். ஆனா அவங்க கஷ்டப்பட்டது மாதிரி தெரியலை. அவங்க பிளட்லயே இருக்குதே ஆக்டிங்.
யார் ஷமிதாப்?
 
ஷமிதாப் என்னைப் பொறுத்தவரை இளையராஜா சார்தான்.
 
ஷுட்டிங் வர்றதுக்கு முன்னாடியே வீட்ல நீங்க ரிகர்சல் பார்த்து ப்ரிப்போர் பண்ணிட்டுதான் வருவீங்கன்னு பால்கி சொன்னாரே?
 
நமக்கு அந்தளவு அறிவெல்லாம் கிடையாது. ஒரு கேரக்டருக்கு என்ன வேணும்ங்கிறதை இயக்குனர் ஆராய்ச்சி பண்ணி எல்லாமே தயாரா புக்குல இருக்கும். அதனால நாம எதுவும் யோசிக்க வேண்டியதில்லை. எவ்வளவு எம்ப்டியா போகிறமோ அவ்வளவு நல்லது. எவ்வளவு காலியா போறோமோ அவ்வளவுதூரம் அவங்களால ஃபில் பண்ண முடியும்.