ஜனநாயகன் லீக் விவகாரம்!. 6 பேர் கைது!.. 30 இணையதளங்கள் முடக்கம்!...
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான திரைப்படம் ஜனநாயகன். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் ஜனநாயகன் அவரின் கடைசி படமாக கருதப்பட்டது. கடந்த ஜனவரி 9ம் தேதி படம் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது.
ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை. இதையடுத்து தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.. ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே வழக்கை வாபஸ் பெற்றதோடு மறுத்தணிக்கைக்கும் தயாரிப்பாளர் விண்ணப்பித்தார். ஆனால் இப்போது வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை..
படத்தில் தேர்தல் தொடர்பான காட்சிகள் இருப்பதால் தேர்தல் ஆணைய அதிகாரிஅக்ள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என தணிக்கை அதிகாரிகள் கூறிவிட்டனர்.. ஆனால் தேர்தல் அதிகாரிகள் இப்போது வரை இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பு ஜனநாயகன் முழு படமும் சில இணையதளங்களில் லிக் ஆகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. படத்தை ஷேர் செய்தாலோ, டவுன்லோட் செய்தாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதோடு சைபர் கிரைமிலும் புகார் அளிக்கப்பட்டது..
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.. மேலும் 30 இணையதளங்கள் முடக்கப்பட்டிருக்கிறது.. கைது செய்யப்பட்ட 6 பேரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருபக்கம் சைபர் கிரைம் போலீசார் ஜனநாயகன் திரைப்படம் எப்படி கசிந்தது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.