1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 30 டிசம்பர் 2014 (09:57 IST)

நண்பேன்டா சூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்

எந்த ஆடியோ விழாவுக்கும் வராதவர் உதயநிதி ஸ்டாலினுக்காக நண்பேன்டா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது சந்தானத்தின் அதிரடிப் பேச்சு ஆடியன்ஸை அள்ளிக் கொண்டது. அது அப்படியே உங்களுக்காக.
 
நண்பேன்டா பற்றி சொல்லுங்க?
 
நண்பேன்டா, பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நானும், ஆர்யாவும் பேசின டயலாக். அங்க சொன்ன டயலாக்கை லிங்காவுல சூப்பர் ஸ்டார் ரஜினிவரை சொல்லிருக்கேன். அந்தளவு ரீச்சான டயலாக். அதுமாதிரி படமும் கண்டிப்பா ஹிட்டாகும். 
ஒளிப்பதிவு ரிச்சாக தெரிகிறதே?
 
கேமராமேன் பாலு சார்தான் அதுக்கு காரணம். ஒரு சீன்ல குப்பையெல்லாம் கூட்டிப்போட்டு அதில் சின்னதா ஒரு குப்பை போடுற மாதிரி ஒரு ஷாட். அதுக்கே லைட்டிங் எல்லாம் வச்சு கும்முன்னு காமிச்சார். அப்படி குப்பையைகூட கும்முன்னு காட்டுவார்.
 
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்...?
 
எப்படி அவர் கலர்ஃபுல்லா இருக்காரோ அதே மாதிரி மியூஸிக்கும் கலர்ஃபுல்லா இருக்கும். அவர் கீ போர்ட் வாசிக்க ஆரம்பிச்சா குப்புற படுத்திருக்கிற பசங்களும் எந்திரிச்சி ஆட ஆரம்பிச்சிடுவாங்க.
 
இயக்குனரைப் பற்றி சொல்லுங்க...?
 
இயக்குனர் ஜெகதீஷ் யார்னா இயக்குனர் ராnஜஷேnட குட்டையில் ஊறுன மீன் அவர். ஜெகதீஷ் ஒரு சீனுக்கு எழுதின பன்சஸை பார்த்தீங்கன்னா அதையே ஒரு படமா எடுக்கலாம். அவ்ளோ இருக்கும், படிச்சே டயர்டாயிடுவோம். அதுலயிருந்து பெஸ்ட் எடுத்து பண்ணியிருக்கோம். ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அது கண்டிப்பா படத்துல இருக்கு. 
 
உதயநிதி டான்சில் கலக்கியிருக்கிறாரே?
 
முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடியில் டான்ஸ் ஆடும்போது, ஸ்கூல் ட்ராமால குழந்தைகள் ஒருத்தரையொருத்தர் பார்த்துகிட்டு செய்வாங்களே. அந்தமாதிரி நான் கை தூக்குனா அவர் கை துhக்குவார். நான் கால் வச்சா அவரும் கால் வைப்பார். மாஸ்டர் சொல்வார், ஏன் திருட்டுத்தனமா ஆடுறீங்க, கேமராவைப் பார்த்து தைரியமா ஆடுங்கன்னு. ஸேn அப்படியிருந்தோம். இந்தப் படத்துல அவருடைய டான்ஸைப் பார்த்து பேஜாராயிடுச்சி. அப்போ எல் போர்டா இருந்தாரு, இப்போ ஹெவி லைசன்ஸ் எடுக்கிற அளவுக்கு ஆயிட்டார். 
 
புரோடியூசர்...?
 
புரொடியூசர் மூர்த்தி சார். ஷுட்டிங் நடக்கிறப்போ ஒவ்வொரு கோவிலா போயிடுவார். இருங்காட்ல லட்டு தர, திருவேற்காட்ல சர்க்கரைப் பொங்கல் தரன்னு. அப்படியொரு பக்திமான்.
 
உங்க படம்னா சரக்கடிக்கிற காட்சி கண்டிப்பா இருக்குமே?
 
எல்லா படத்துலயும் சரக்கடிக்கிற மாதிரி சீன் பண்ணியிருப்பேன். இந்தப் படத்துல சரக்கு இல்லாம கம்ப்ளீட்டா வேற மாதிரி ஒரு விஷயம் பண்ணியிருக்கோம். 
 
படம் எப்படி வந்திருக்கு?
 
ஓகே ஓகே யை எப்படி ரசிச்சீங்களோ, அதோட பார்ட் டூவா இந்தப் படம் இருக்கும். கண்டிப்பா என்ஜாய் பண்ணுவீங்க.