ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (12:19 IST)

முத்தம் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி - நடிகை இஷா தல்வார் அதிரடி பேட்டி

முத்தம் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி - நடிகை இஷா தல்வார் அதிரடி பேட்டி

மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான தட்டத்தின் மறயத்து படத்தின் மூலம் பிரபலமானவர் இஷா தல்வார்.


 


பெங்களூர் டேய்ஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர், தமிழில் தில்லுக்கு முல்லு படத்தில் நடித்தார். தற்போது தட்டத்தின் மறயத்து தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மலையாளத்தில் செய்த அதே நாயகி வேடத்தை தமிழிலும் செய்துள்ளார் இஷா தல்வார்.
 
படம் வெளியாவதையொட்டி நடந்த பிரஸ்மீட்டில் நிருபர்களின் கேள்விகளுக்கு இஷா தல்வார் பதிலளித்தார்.
 
தில்லுமுல்லு படத்துக்குப் பிறகு தமிழில் உங்களை பார்க்க முடியவில்லையே?
 
மலையாளம், தெலுங்கு, இந்தி என மற்ற மொழி படங்களில் நடித்ததால்தான்  இடைவெளி விழுந்துவிட்டது. இனிமேல், தமிழ் படங்களில் அதிக கவனம் செலுத்துவேன்.
 
படத்தில் காதலிக்கும் நீங்கள் நிஜத்தில் காதலித்தது உண்டா?
 
எனக்கு இதுவரை யார் மீதும் காதல் வந்ததில்லை.
 
உங்களை குறித்து கிசுகிசுவும் அதிகம் வருவதில்லையே, எப்படி?
 
நான் யாரையும் காதலிக்கவில்லை. அதனால் கிசுகிசுவும் என்னைப் பற்றி வருவதில்லை.
 
சில நடிகைகள் முத்தக் காட்சிகளில் நடிக்கிறார்கள். நீங்கள் எப்படி?
 
முத்தம் மனித வாழ்க்கையின் ஒரு பகுதி. எனவே முத்தக் காட்சியிகளில் நடிப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். கதைக்கு தேவைப்பட்டால் முத்தக் காட்சியில் நடிக்க நான் தயாராகவே இருக்கிறேன்.
 
காதல், சோகம்... எது நடிப்பதற்கு சிரமம்?
 
நடிப்பது என்னுடைய தொழிலாகிவிட்ட பிறகு, எல்லாவிதமான காட்சிகளிலும் நடிப்பதுதான் முறையானது. நீங்கள் சொல்லும் காதல், சோகம் இரண்டுமே நடிப்புதான். இதில் எது சுலபம், எது கடினம் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. எனக்கு இரண்டுமே ஒன்றுதான்.