சிம்பு சொன்னதை கேட்டு நெகிழ்ந்திட்டேன் - டி.ஆர். பேட்டி
சிம்பு சொன்னதை கேட்டு நெகிழ்ந்திட்டேன் - டி.ஆர். பேட்டி
புலி படம் சிக்கலில் மாட்டியபோது ஓடிவந்து முன்னால் நின்றவர் டி.ராஜேந்தர். சிம்பு நடித்த வாலு பிரச்சனையில் சிக்கிய போது விஜய் உதவினார்.
அதற்கான கைமாறுதான் இது. இந்த உறவு இன்னும் நீடிக்கிறது. புலி தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் போக்கிரி ராஜா படத்தின் பிரஸ்மீட்டிலும் படத்துக்கு சம்பந்தமில்லாத டி.ராஜேந்தர்தான் சீஃப் கெஸ்ட்.
எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். கடவுள் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருந்தால் எதையும் வெல்லலாம் என்றவர், தனது மகனின் பீப் விவகாரத்துக்கு வந்தார்.
"பீப் பாடல் இவ்வளவு சர்ச்சையாகும்னு நினைக்கலை. என் மகன் கோவை போன போது போலீஸார் அவனிடம் 35 கேள்விகள் கேட்டாங்க. அவங்ககிட்ட, பீப் பாடலுக்கும் அனிருத்துக்கும் சம்பந்தமில்லைன்னு சிம்பு சொன்னார். பாடலை யார் வெளியிட்டது? யார் மீது உங்களுக்கு சந்தேகம்னு, இவர் மீதுதான் சந்தேகம்னு யார் மனதையும் நான் நோகடிக்க விரும்பலை. நீங்கள்தான் பாடலை யார் பதிவேற்றம் செய்ததுன்னு கண்டுபிடிக்கணும்னு சொன்னதை கேட்டு நான் நெகிழ்ந்து விட்டேன்.
புலி படத்தில் என்ன பிரச்சனை...?
புலி வெளியாவதில் நிறைய பிரச்சனைகள் இருந்தது. பட ரிலீஸுக்கு முதல்நாள்வரை போராட்டம்தான். அப்படியும் புலியின் முதல் காட்சியை சில இடங்களில் ஸ்கிரீன் பண்ண முடியாமல் போனது. அதுக்கு இப்போ நஷ்டஈடு கேட்கிறார்கள். ஆனால், விநியோகஸ்தர்களுக்கு பெரிய நஷ்டம் இல்லாமல் ஓடின படம் புலி.
போக்கிரி ராஜாவுக்கு என்ன பிரச்சனை...?
இந்தப் படத்துக்கும் பிரச்சனைதான் பத்து நாளுக்கும் மேலா பிரச்சனை போய்க்கிட்டிருக்கு. விநியோகஸ்தர், தயாரிப்பாளர் எல்லோர்கிட்டயும் உட்கார்ந்து பேசி பிரச்சனையை முடிச்சிட்டோம்.
சினிமா இப்போ எப்படியிருக்கு?
முன்ன மாதிரி இல்லை. எங்க காலம் பொற்காலம். இன்னைக்கு எல்லா டைரக்டர்ஸும் கஷ்டப்பட்டுதான் ஜெயிக்க வேண்டியிருக்கு. சினிமா உலகம் செத்துகிட்டிருக்கு. எனக்கு சோறு போட்டது சினிமாதான். அரசியல் புகழை வைத்து நான் சினிமாவுக்கு வரலை. சினிமா புகழை வைத்துதான் அரசியலுக்கு வந்தேன். அந்த சினிமா நல்லா இருக்க வேண்டும்.
போக்கிரி ராஜா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்...?
அவர் என் நண்பர். அவருக்கு ஒரு கஷ்டம்... ஓடி வந்து நின்னேன். சினிமாவில் யாருக்கு கஷ்டம்னாலும் நான் ஓடி வந்து நிற்பேன். பி.டி.செல்வகுமாரின் போக்கிரி ராஜா மாபெரும் வெற்றி பெறும்.