டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்தேன் - நடிகை ஜனனி பேட்டி

டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்தேன் - நடிகை ஜனனி பேட்டி


Sasikala| Last Modified வியாழன், 30 ஜூன் 2016 (16:21 IST)
அவன் இவனில் கவனம் ஈர்த்த ஜனனி (ஐயரை கட் பண்ணிடுவோம்) கடைசியாக தெகிடி படத்தில் நடித்தார். 

 
 
தற்போது இரண்டு மூன்று தமிழ்ப் படங்கள் அவர் கைவசம் உள்ளன. மலையாளத்திலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
 
நீங்கள் மலையாளியா?
 
மலையாளத்தில் அதிகம் நடிப்பதால், இப்படியொரு சந்தேகம் பலருக்கு இருக்கிறது. நான் தமிழ்ப் பெண். பிறந்ததும் வளர்ந்ததும் சென்னையில். பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு இரண்டும் சென்னையில்தான். தமிழ் நன்றாக பேசத் தெரியும் என்பதால்தான் அவன் இவன் படத்தில் பாலா எனக்கு வாய்ப்பு தந்தார்.
 
மலையாளத்தில் நிறைய படங்கள் நடிக்கிறீர்களே?
 
நான் நடித்த முதல் மலையாளப் படம், 3 டாட்ஸ். அங்கு ஹிட்டானது. அதன் பிறகு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வருகிறது. மலையாளத்தில் நான் நடித்த செவன்த் டே, மொசையிலே குதிர மீன்கள், இதுதாண்டா போலீஸ் எல்லாமே வெற்றிப் படங்கள்தான்.
 
தமிழில் அதிகம் பார்க்க முடியவில்லையே?
 
மலையாளத்தில் வித்தியாசமான சவாலான வேடங்கள் கிடைக்கிறது. தமிழிலும் வாய்ப்புகள் வருகிறது. ஆனால் மனசுக்கு பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். இப்போது உல்டா என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இது ஒரே நேரத்தில் தமிழ், மலையாளத்தில் தயாராகிறது.
 
மலையாளத்தில் நடித்துவரும் மா சூ கா படத்துக்காக சண்டையெல்லாம் போட்டீர்களாமே?
 
இதில் பசுபதி, நான், பிரதாப் போத்தன் மூவரும்தான் பிரதான வேடங்களில் நடிக்கிறோம். இந்தப் படம்தான் தமிழில் உல்டாவாக வெளியாகவிருக்கிறது. இதில் பத்திரிகையாளராக நடித்திருக்கிறேன். இதுவரை நான் ஏற்காத வேடம்.
 
சண்டைக் காட்சி...?
 
இதில் சண்டைக் காட்சி உண்டு. முதலில் என்னை வைத்து சண்டைக் காட்சியை எடுக்க, இயக்குனர் ஜெயன் வன்னேரி ரொம்பவும் தயங்கினார். டூப் போடலாம் என்றார். நான்தான் விடாப்பிடியாக டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்தேன்.
 
தமிழில் நடிக்கும் வேறு படங்கள்?
 
கலையரசனுடன் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். மலையாளத்தில் எடிசன் போட்டோஸ் உள்பட 3 படங்களில் நடிக்கிறேன்.
 


இதில் மேலும் படிக்கவும் :