1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 7 மார்ச் 2017 (10:03 IST)

என்னை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள் - பாடகி சுசித்ரா பரபரப்பு பேட்டி

பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடும், திரைநட்சத்திரங்கள் குறித்த அந்தரங்க படங்கள், செய்திகள் தமிழகத்தின் ஹாட் டாபிகாக இருந்து வருகிறது. இந்த படங்களையும், செய்திகளையும் அவரே போடுகிறாரா இல்லை அவரது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படாத நிலையில், சுசித்ரா இது குறித்து பேட்டியளித்துள்ளார்.


 
 
ட்விட்டர் கணக்கை ஹேக் செய்துவிட்டனர்
 
எனது ட்விட்டர் பக்கத்தை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாலோ செய்கிறார்கள். இதற்கு ப்ளூ டிக் கிடையாது என்பதால்  ஈஸியாக ஹேக் செய்யலாம். அப்படித்தான் ஹேக் செய்து முடக்கியிருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது  என்னுடைய பேஸ்புக்கை ஹேக் செய்தார்கள். இப்போடு ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்திருக்கிறார்கள். ட்விட்டர்  நிர்வாகத்துக்கு, என்னுடைய ட்விட்டர் பக்கத்தை மூடும்படி கடிதம் அனுப்பினேன்.
 
தனுஷ் அலுவலகத்திலிருந்து போன்
 
இரண்டு நாள்களுக்கு முன், சாங் ரெகார்டிங் முடிந்து இரவு வீட்டிற்கு வந்து தூங்கினேன். காலையில் தனுஷ் ஆபிஸிலிருந்து  போன் செய்து, உங்க ட்விட்டர் கணக்கை மீண்டும் ஹேக் செய்திருப்பதாக சொன்னார்கள். அப்போதுதான் படங்களை பார்த்தேன்.  அந்தப் படங்களை நீக்க ட்ரை பண்ணினேன். தொடர்ந்து படங்கள் போடப்பட்டு வந்ததால் என் சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. சிலர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்ட என்னுடைய ட்விட்டர் பக்கத்தை பயன்படுத்துகிறார்கள். யாருக்கு  யார் மீது பொறாமை, யாரை பழிவாங்க இதை செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை.
 
விவாகரத்தை நோக்கி...
 
நானும் என்னுடைய கணவர் கார்த்திக் குமாரும் கடந்த 10 வருடங்களாக குடும்பம் நடத்தினோம். ஆனால், இப்போது அந்த  வாழ்க்கை நன்றாக இல்லை. திருமண வாழ்க்கை விவாகரத்தை நோக்கி செல்கிறது. என்னுடைய சொந்த வாழ்க்கையையும்  இப்போது தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
 
வலுக்கட்டாயமாக மருத்துவமனையில்...
 
நான் சென்னையில்தான் இருக்கிறேன். த்ரிஷா நடிக்கும் படத்தில் ஒரு பாடலை பாடி ரெக்கார்டிங்கை முடித்துவிட்டுதான்  வந்தேன். ஆனால் நான் ஹாஸ்பிடலில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இதை இசை அமைப்பாளரிடம் கேட்டே நீங்கள் கன்பார்ம்  செய்து கொள்ளலாம்.
 
நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டடு இருந்தது என்னுடைய சொந்த வாழ்க்கையுடன் தொடர்புடையது. அதனால்  அதுபற்றி விளக்கமாக பேச விரும்பவில்லை. சில தினங்களுக்கு முன் என்னை நிர்ப்பந்தப்படுத்தி வலுக்கட்டாயமாக  ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார்கள். அது என்னுடைய விவாகரத்துடன் சம்பந்தப்பட்ட விஷயம்.
 
என்னுடைய கணவர் ராமரைப் போல...
 
நண்பர்கள்தான் அதிகம். ட்விட்டர் சர்ச்சையில் என்னுடைய கணவர் எனக்கு எதிராக செயல்படவில்லை. அவர் தங்கமான  மனிதர். ராமரைப்போல அவரை நான் பார்க்கிறேன். ஆனாலும், தீர்வு காண முடியாத ஒரு பிரச்சனை காரணமாக நாங்கள்  விவாகரத்து செய்யப் போகிறோம்.