திங்கள், 20 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Geetha Priya
Last Updated : சனி, 16 ஆகஸ்ட் 2014 (16:58 IST)

ஆர்யா ஒரு ஹார்ட் வொர்க்கர் - மகிழ்திருமேனி

ஆர்யா ஒரு ஹார்ட் வொர்க்கர் - மகிழ்திருமேனி
தடையற தாக்க படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் மகிழ்திருமேனி. ஆர்யாவை வைத்து ஒரு ஸ்டைலிஷான ஆக்ஷன் படம் எடுத்திருக்கிறேன் என்ற அவரது வார்த்தைகளில் தன்னம்பிக்கையும், படம் தீதான நம்பிக்கையும் மிளிர்கிறது. பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசியவை இங்கே உங்களுக்காக.
 
ஹீரோ ஆர்யா பற்றி சொல்லுங்க...?
 
ஆர்யாகூட பர்ஸ்ட் டைம் வொர்க் பண்ணுனாலும் அவரை எனக்கு ஏழெட்டு வருஷமா தெரியும். எங்கயாச்சும் பார்த்தால் ஹாய், ஹலோ சொல்ற அளவுக்கு பழக்கம் இருந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஆர்யா ரொம்ப கேஷுவல், ரொம்ப ப்ரெண்ட்லின்னு கேள்விப்பட்டிருக்கேன். அது உண்மையும்கூட. 
இது எல்லோருக்கும் தெரிந்தது, ஏதாவது ஸ்பெஷலா...?
 
இதையும் தாண்டி இந்தப் படத்துல நான் ஆர்யா கிட்ட பார்த்து வியந்தது என்னன்னா...அவர்கிட்ட இருக்கக் கூடிய ப்ரஃபஷ்னலிசம், டெடிகேஷன். அதுக்கான மெனக்கெடல், தொழில் மீது அவர் வச்சிருக்கிற மரியாதை, டிசிப்ளின். நாங்க சென்னையில எங்க ஷுட்டிங் நடத்தினாலும் ஷுட்டிங் ஸ்பாட்டுக்கு சைக்கிள்லதான் வருவார். தன்னோட பாடியை மெயின்டெய்ன் பண்ணணும் அப்படிங்கிறதுக்காக. ஹார்ட் வொர்க்கர். 
 

இசையமைப்பாளர் தமன்..?
 
தமனுடன் எனக்கு இது மூன்றாவது படம். தமன்கூட வொர்க் பண்றது எனக்கு இலகுவான கம்பர்ட்டபிளான விஷயம். ஏன்னா என்னோட வேவ்லெந்தும், மைண்ட் செட்டும் ஒரு நண்பனா, நான் ஒரு ஸ்கிரிப்ட் சொன்னா அந்த ஸ்கிரிப்டுக்கு என்ன மியூஸிக் தேவை அப்படீங்கிறதை தீர்மானிக்கிற பக்குவம் உடையவன்.
ஆர்யா ஒரு ஹார்ட் வொர்க்கர் - மகிழ்திருமேனி

அவனோட திறமை அசாத்தியமானது. மியூஸிக்ல எந்த ஜானர்ல ஒரு காம்போசிஸன் கேட்டாலும் அதுக்கான ஹோம்வொர்க் பண்ணி அந்த ஜானர்ல நல்ல காம்போசிஸன் தரக்கூடிய அசாத்தியமான மியூஸிக் டைரக்டர்.
 
 

பாடலாசிரியர் கார்க்கி...?
 
கார்க்கி முதல்ல என்னோட நண்பர். அப்புறம்தான் பாடலாசிரியர். கார்க்கி கிட்ட எனக்குப் பிடிச்சது கார்க்கியோட அட்டியூட். என்னோட முதல் படத்தின் போது அவர் ஷங்கர் சாருக்கெல்லாம் பாட்டெழுதி பெரிய இடத்தில் இருந்தார். அப்போ நான் கேட்டுகிட்ட ஒரு சிச்சுவேஷனுக்காக 17 வெர்ஷன் எழுதித் தந்தார். கொஞ்சம்கூட முகம் சுழிக்கலை. 
ஆர்யா ஒரு ஹார்ட் வொர்க்கர் - மகிழ்திருமேனி
கேமராமேன்...?
 
சதீஷ் இந்தப் படத்தோட கேமராமேன். அவரைப் பற்றி நான் சொல்றதுக்கு எதுவுமில்லை. படம் அவரைப் பற்றி பேசும். அப்படியொரு திறமையானவர்.
 

அதென்ன மீகாமன்...?
 
மீகாமன்னா கேப்டன் ஆஃப் த ஷிப் -ன்னு அர்த்தம். அது தூய தமிழ் வார்த்தை. 
ஆர்யா ஒரு ஹார்ட் வொர்க்கர் - மகிழ்திருமேனி
படத்தின் கதை என்ன?
 
படத்தில் நிறை கேரக்டர்ஸ் இருந்தாலும், இது ஒரு மனிதனின் விளையாட்டு. ஒரு மனிதன் ஒரு காரியத்தை எடுத்து அதை எப்படி நடத்தி முடிக்கிறான் என்பதுதான் படத்தோட கதை.