வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Sasikala
Last Modified: திங்கள், 6 ஜூன் 2016 (12:17 IST)

40 வயது வேடத்தில் நடிக்க ஹீரோக்கள் தயாராக இல்லை - சுந்தர் சி. பேட்டி

40 வயது வேடத்தில் நடிக்க ஹீரோக்கள் தயாராக இல்லை - சுந்தர் சி. பேட்டி

இனிமேல் இயக்கம்தான் என்று நடிப்பிலிருந்து விலகிய சுந்தர் சி. அரண்மனை மற்றும் அரண்மனை 2 படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து, முத்தின கத்திரிக்காய் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். படம் குறித்து சுந்தர் சி. பேசியவை உங்களுக்காக.


 
 
முத்தின கத்திரிக்காயின் நதிமூலம் என்ன?
 
நான் ஒருநாள் டி.வி.யில் வெள்ளி மூங்கா என்ற மலையாளபடத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். படம் மிகவும் ரசனையாக சென்றது. சிரிப்பை அடக்க முடியவில்லை. எனவே, இந்தப் படத்தை ரீமேக் செய்யலாம் என்று முடிவு செய்தேன்.
 
அதுதான் முத்தின கத்திரிக்காயா?
 
ஆமாம். அந்தப் படத்திலிருந்து ஒரு லைனை எடுத்து முத்தின கத்திரிக்காயை உருவாக்கியிருக்கிறோம்.
 
படத்தின் கதை என்ன?
 
40 வயது ஆன பிறகும் திருமணம் செய்து கொள்ளாத அரசியல்வாதி பற்றிய கதை.
 
நீங்கள் இதில் நடிக்க என்ன காரணம்?
 
பல ஹீரோக்களிடம் கேட்டபோது அவர்கள் இந்த வேடத்தில் நடிக்க தயாராக இல்லை. எனவே நானே கதாநாயகனாக நடிக்க முடிவு செய்தேன். எனது உதவியாளர் வெங்கட் ராகவனை இந்த படத்தை இயக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
 
ஏன் வெங்கட் ராகவன்?
 
அவர் திறமைசாலி எனது வலது கரமாக செயல்பட்டவர். எனவே இந்த முடிவை எடுத்தேன். ஆனால் வெங்கட்ராகவன் அதற்கு தயாராக இல்லை. அவர் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும். ஆகவே வற்புறுத்தி இந்த படத்தை இயக்க வைத்தேன். 
 
படம் எப்படி வந்திருக்கிறது?
 
படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. இயக்குனர் வெங்கட் ராகவனின் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் படம் உருவாகி இருக்கிறது. வெங்கட் ராகவனின் வளர்ச்சிக்கு இது முக்கிய படமாக இருக்கும்.
 
உங்கள் ட்ரேட்மார்க் காமெடி இருக்குமா?
 
படத்தில் அரசியல் இருந்தாலும் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. படம் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்கலாம்.