1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூன் 2020 (17:36 IST)

கடவுளுடன் கைகுலுக்குவது போல – சச்சின் குறித்து யுவ்ராஜ் நெகிழ்ச்சி!

இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேனான சச்சினுடனான தனது முதல் சந்திப்பு குறித்து யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத நிலையில் கிரிக்கெட் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலமாக தங்களுக்குள் உரையாடி ரசிகர்களுடனான தொடர்பை மேம்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான சச்சின் மற்றொரு பேட்ஸ்மேனான யுவ்ராஜ் சிங் உடனான முதல் சந்திப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘உங்களுடன் முதல் சந்திப்பு சென்னை பயிற்சி முகாமில்தான் நடந்தது. அப்போது என்னால் உங்களுக்கு உதவ முடியவில்லை. உங்கள் உடல்தகுதி அபாராமாக இருந்தது. உங்களால் உலகின் எந்த மைதானமாக இருந்தாலும் சிக்ஸர் விளாசமுடியும்’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக யுவ்ராஜ் ‘நன்றி மாஸ்டர். உங்களை முதன்முதலில் சந்தித்தது கடவுளுடன் கைகுலுக்குவது போல இருந்தது. என்னுடைய கடினமாக நேரங்களில் நீங்கள் எனக்கு வழிகாட்டினீர்கள். என்னுடைய திறமையை நம்ப சொன்னீர்கள். நீங்கள் எனக்கு செய்ததை போல நான் இளைஞர்களுக்கு வழிகாட்டுவேன்’ எனக் கூறியுள்ளார்.