1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 22 ஜூலை 2016 (06:05 IST)

பெண்களுக்கு மரியாதை செலுத்தும் ஷாருக் - நாட்டின் சொத்து என புகழாரம்

மேரிகோம், பி.டி.உஷா, சானியா மிர்சா போன்ற பெண்கள் நமது நாட்டின் மிகப்பெரும் சொத்து என்று பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூறியுள்ளார்.
 

 
சமீபத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தன்னுடைய சுயசரிதை புத்தகத்தை வெளியிடுவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி, புதனன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘Ace Against Odds’ என்ற சுய சரிதை புத்தக வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பிரபல திரைக்கலைஞர் ஷாரூக்கான் அழைக்கப்பட்டிருந்தார்.
 
புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய ஷாரூக்கான், “எவ்வளவு அதிகமாக பெண்களுக்கு மதிப்பு தருகிறோமோ அந்த அளவுக்கு நாடு முன்னேற்றம் அடையும். மேரிகோம், பி.டி.உஷா, சானியா மிர்சா போன்ற பெண்கள் நமது நாட்டின் மிகப்பெரும் சொத்து. இவர்கள், விளையாட்டுத் துறைக்கு அளப்பரிய பங்களிப்பைத் தந்துள்ளனர்.
 
மற்ற பெண்களும், இவர்களை முன் உதாரணமாக வைத்து முன்னேறத் தொடங்கியுள்ளனர். சானியா மிர்சா ‘டென்னிஸ் ராணி’ என்று அழைக்க தகுதியானவர்” என்று கூறினார்.