ஒரு மணி நேரத்திற்கு சிக்ஸர் மழை; சேப்பாக்கத்தில் தோனியின் ஹெலிகாப்டர்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 22 ஜூலை 2017 (19:15 IST)
தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் தொடங்குகிறது. இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் தோனி, மோஹித் சர்மா, பத்ரிநாத், பவந் நேகி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

 
 
இந்நிலையில் போட்டி துவங்கும் முன் சிக்ஸர் விளாசும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில், தோனி, முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மாத்யூ ஹெய்டன், அனிருத்தா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். 
 
இன்று மாலை 6 மணிக்கு இந்த சிக்ஸர் விளாசும் போட்டி தொடங்கி 7 மணி வரை நடைபெறும். அதன் பின்னர் டாஸ் போடப்பட்டு முதல் போட்டி 7.15-க்கு தொடங்கும். 
 
முதல் போட்டியில், நடப்புச் சாம்பியன் ஆல்பர் டூட்டி பேட்ரியாட்டும், திண்டுக்கல் டிராகன் அணியும் மோதவுள்ளன. 
 


இதில் மேலும் படிக்கவும் :