பும்ரா பந்துவீச்சில் அடுத்தடுத்து விழும் விக்கெட்டுக்கள்: ஆஸ்திரேலியா ஸ்கோர் விவரம்..!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பைன் நகரில் நேற்று தொடங்கிய நிலையில், நேற்றைய முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக 13 ஓவர்கள் மட்டுமே நடந்தது.
இந்த நிலையில், இன்று இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து வருகிறது. நேற்று 13 ஓவர்களில் 28 ரன்கள் எடுத்து விக்கெட் இழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய அணி, இன்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
17வது ஓவரில் உஸ்மான் கவாஜா மற்றும் 19வது ஓவரில் நாதன் ஆகியோர் அடுத்தடுத்து பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்தனர். இதனைத் தொடர்ந்து, லாபு சாஞ்சே 34வது ஓவரில் நிதிஷ்குமார் ரெட்டியின் பந்தில் அவுட் ஆனார்.
தற்போது, ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் பேட்டிங் செய்து வருகின்றனர். 43 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா அணி 114 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியா மீண்டும் வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Siva