ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 7 ஜூலை 2022 (14:12 IST)

கடைசி போட்டியில் தோல்வி: ஓய்வு பெறுகிறார் சானியா மிர்சா!

sania
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக இந்தியாவின் சானியா மிர்சா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் கடைசி போட்டியில் அவர் தோல்வி அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
தற்போது நடைபெற்று வரும் விம்பிள்டன் தொடரில் விளையாடி வரும் இந்தியாவின் சானியா மிர்சா கலப்பு இரட்டையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்
 
குரோசியாவின் பெவிக் என்பவருடன் இணைந்து விளையாடிய சானியா மிர்சா அமெரிக்காவின் டெசிரே கிராசிக் மற்றும் இங்கிலாந்தின் நீல் குப்ஸ்கி இணையிடம் தோல்வி அடைந்தார் 
 
விம்பிள்டன் தொடருடன் ஓய்வு பெறப் போவதாக ஏற்கனவே சானியா மிர்சா அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தோல்வியுடன் தனது விளையாட்டு பயணத்தை முடித்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது