1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 12 ஜூன் 2022 (22:26 IST)

2வது டி20 போட்டியிலும் இந்தியா படுதோல்வி: தொடரை வெல்லை தெ.ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு

indvssa 2nd
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்தியா இந்த போட்டியில் படுதோல்வி அடைந்து தொடரையும் இழக்கும் நிலையில் உள்ளது 
 
இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுவிட்டது 
 
இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பதும், இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது