1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 டிசம்பர் 2020 (07:32 IST)

மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த மே.இ.தீவுகள்: நியூசிலாந்து அபாரம்!

மீண்டும் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த மே.இ.தீவுகள்
நியூசிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் தற்போது முடிந்துள்ள நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி மீண்டும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 
 
நியூசிலாந்து மற்றும் மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையே டிசம்பர் 11ஆம் தேதி ஆரம்பித்த  கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 460 ரன்கள் குவித்தது. இதனையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 131 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ ஆனது
 
இதனையடுத்து அந்த அணி தற்போது 2வது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 317 ரன்கள் மட்டுமே எடுத்தது. இன்னும் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 12 ரன்கள் வித்தியாசத்தில் மே.இதீவுகள் அணி தோல்வி அடைந்தது.
 
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும் தொடர் நாயகனாக கெய்லே ஜேமிசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.