புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 9 அக்டோபர் 2017 (05:47 IST)

8 வீரர்களை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர். ஆஸ்திரேலிய வீரர் சாதனை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தோல்விகளையே சந்தித்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளூரில் நடந்த போட்டி ஒன்றில் உலக சாதனை செய்துள்ளார். அவர் ஒரே போட்டியில் எட்டு விக்கெட்டுக்களை ஸ்டெப்பிங் மற்றும் கேட்ச் மூலம்  அவுட் ஆக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது



 
 
சமீபத்தில் நடைபெற்ற நியூ சவுத் வேல்ஸ் - ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான ஒரு போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் 8 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்தது. 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா லெவன் அணி 41 ஓவரில் 239 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்ததால் அந்த அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது
 
இந்த போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அணி விக்கெட் கீப்பர் நெவில் என்பவர் 8 பேரை கேட்ச் மற்றும் ஸ்டம்பிங் மூலம் அவுட்டாக்கி உலக சாதனைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்து கவுண்டி அணி வீரர்கள் இரண்டு பேர், போலந்து விக்கெட்  கீப்பர் ஆகியோர் இதேபோல் எட்டு வீர்ர்களை அவுட் ஆக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.