திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (18:13 IST)

2011 உலகக்கோப்பை வென்றதற்கு கங்குலிதான் காரணம் – இளம் வீரரின் வித்தியாசமான கருத்து!

இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வெல்ல கங்குலி உருவாக்கிய வீரர்கள்தான் காரணம் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் 2011 ஆம் ஆண்டுகளிலேயே அறிமுகமாகி சதமடித்தாலும், அவருக்கு வரிசையாக அணியில் இடம் கிடைக்கவில்லை. இதுகுறித்து வருந்தி பேசியுள்ள அவர் ‘இந்திய அணியில் மிடில் ஆர்டர் சொதப்பியபோதும், அங்கே இடம் இருந்த போதும் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை’ எனக் கூறியுள்ளார்.

மேலும் 2011 உலகக்கோப்பை வெற்றி குறித்து பேசிய அவர் ‘கங்குலி கேப்டனாக இருந்தபோது, அணியை சிறப்பாக கட்டமைத்தார். நன்கு ஆராய்ந்து பார்த்தால் 2011 உலகக்கோப்பையில் ஆராய்ந்தால் அதில் சிறப்பாக விளையாடிய விரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன், ஜாகீர் கான், நெஹ்ரா, கம்பீர் ஆகிய அனைவரும் கங்குலியால் உருவாக்கப்பட்டவர்களே. இவர்களின் திறமையுடன் தோனியின் கேப்டன்சியும் சேர்ந்ததால் கோப்பை கிடைத்தது.’ எனக் கூறியுள்ளார்.