திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (08:03 IST)

கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. தினேஷ் கார்த்திக் சொதப்பியதால் லக்னோ வெற்றி..!

நேற்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
 
 நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி மிக அபாரமாக விளையாடி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 213 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி 23 ரன்களில் மூன்று விக்கெட்டை இழந்தனர்.
 
அதன் பின்னர் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி 65 ரன்கள் ரன்கள் எடுத்தார். அதேபோல் பூரன் 62 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் கடைசி பந்தில் ஒரே ஒரு ரன் எடுக்க வேண்டிய நிலையில் ரன்அவுட் வாய்ப்பை தினேஷ் கார்த்திக் மிஸ் செய்ததால் லக்னோ அணி 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
Edited by Siva