ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 29 மே 2017 (05:44 IST)

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை: பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி

கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை அடுத்து வரும் ஜூன் 1 முதல் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளுக்கு முன்னர் பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.



 


இந்த பயிற்சி ஆட்டத்தில் நேற்று இந்திய, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 38.4 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

எனவே 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி,  26 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நடப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோலி (52), தோனி (17) அவுட்டாகாமல் உள்ளனர்.

 தொடர்ந்து மழை நீடித்ததால், போட்டியை ரத்து செய்வதாக அம்பயர்கள் அறிவித்தனர். தவிர, டி.ஆர்.எஸ்., முறைப்படி, இந்திய அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.