செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி: வெற்றி பெறுவது யார்?

இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி: வெற்றி பெறுவது யார்?
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி தொடரை வென்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்க உள்ளது. இன்றைய போட்டியில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணியின் ஒருநாள் போட்டியில் வெல்ல தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் டெஸ்ட் தொடரை வென்ற உற்சாகத்திலிருக்கும் தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை கைப்பற்ற முழு முயற்சியில் இறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் கேப்டனாக கேஎல் ராகுல் களமிறங்க உள்ளார் என்பதும் துணை கேப்டனாக பும்ரா உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இன்றைய போட்டியை புத்துணர்ச்சியுடன் இந்திய அணி விளையாட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
இதற்கு முன்னர் நடைபெற்ற இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வென்று உள்ளது என்பதும் ஒரு போட்டியில் தென்னாபிரிக்கா வென்றுள்ளது என்பதும் ஒரு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது