1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2023 (14:42 IST)

முதல் ஒருநாள் போட்டி.. 3 பந்துகளில் 3 விக்கெட்.. 52 ரன்களில் 6 விக்கெட் இழந்த தென்னாப்பிரிக்கா..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே தற்போது நடைபெற்று வருவது முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்று பந்துகளில் மூன்று விக்கெட் என மொத்தம் ஆறு விக்கெட்டுகளை 52 ரன்களுக்கு இழந்து திணறி வருகிறது.  
 
இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.  தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் டக் அவுட் ஆன நிலையில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து கொண்டே இருந்தன.  
 
10வது ஓவரின் கடைசி பந்திலும் 11வது ஓவரின் முதல் 2 பந்துகளிலும் விக்கெட் விழுந்தது. அர்ஷ்தீப்  சிங் அபாரமாக பந்துவீசின் நான்கு கட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். அவேஷ்கான் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
 
சற்றுமுன் வரை தென் ஆப்பிரிக்க அணி 11 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 55 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் இந்த போட்டியை இந்தியா மிக எளிதில் வென்று விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva