1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 1 ஜூலை 2018 (16:07 IST)

இந்திய அணியின் அதிகபட்ச பார்ட்னெர்ஷிப்க்கு துணை நின்ற ரோகித்!

இந்திய அணியின் முதல் நான்கு அதிகபட்ச பார்ட்னெர்ஷிப்க்கு ரோகித் சர்மா துணையுடன் எடுக்கப்பட்டது.
அயர்லாந்து அணிக்கு எதிராக டி20 தொடரின் முதல் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா - தவான் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது.
 
இந்த ஸ்கோர் இந்திய அணியின் இரண்டாவது அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் ஆகும். முதல் அதிகபட்ச பார்ட்னெர்ஷிப் ரோகித் - ராகுல் கூட்டணியில் 165 ரன்கள் ஆகும். இந்திய அணியின் டி20 அணியின் டாப் 5 பார்ட்னெர்ஷிப் பட்டியலில் முதல் 4 பார்ட்னெர்ஷிப் ரோகித் சர்மா துணையுடன் எடுக்கப்பட்டது.
 
இந்திய அணியின் சிறந்த துவக்க ஆட்டக்காரர்கள் வரிசையில் ரோகித் சர்மா சிறந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.