ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 18 மார்ச் 2021 (08:07 IST)

ரிட்டையர் ஆனாலும் அதே அதிரடிதான்… இறுதிப் போட்டியில் இந்தியா லெஜண்ட்ஸ்!

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது.

சாலைப் பாதுகாப்பை வலியுறுத்தும் விதமாக ஓய்வு பெற்ற வீரர்களைக் கொண்டு கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. அதையடுத்து இந்த ஆண்டும் அதே போல தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் லெஜண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டி நேற்று இரவு நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த இந்தியா லெஜண்ட்ஸ் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. சேவாக் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்து சென்றார். அதன் பின்னர் சச்சின் சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ரன்ரேட் 10க்கு குறையாமல் சென்றது. கடைசி நேரத்தில் யூசுப் பதான் மற்றும் யுவராஜ் ஆகியோரின் அதிரடியால் 3 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் சேர்த்தது. அதிரடியாய் விளையாடிய யுவி 20 பந்துகளில் 49 ரன்கள் சேர்த்தார். அதில் 6 சிக்ஸர்களும் ஒரு பவுண்டரியும் அடங்கும்.

இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி வரை போராடினாலும் 20 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா லெஜண்ட்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது.