1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 19 ஜூலை 2017 (16:12 IST)

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தங்கம் வென்ற இந்திய வீராங்கனை

ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்திய முன்னணி தடகள வீராங்கனையில் ஒருவரான மன்பிரீத் கவுர் அண்மையில் நடைப்பெற்ற ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்றார். இதன்மூலம் குண்டு ஏறிதல் பிரிவில் நம்பர் ஒன் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் அவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக செய்திகள் பரவியது. 
 
இதையடுத்து உலக ஊக்கமருந்து தடுப்பு முகமை அவருக்கு சோதனை நடத்தியது. இதில் மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து உட்கொண்டது தெரியவந்தது. இதனால் அவரது தங்கப்பதக்கம் பறிக்கப்படும் என தெரிகிறது.