தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணியில் பங்கேற்கும் சூப்பர் சீரிஸ் – வலுக்கும் எதிர்ப்பு !

Last Modified புதன், 25 டிசம்பர் 2019 (14:19 IST)
இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் அணிகள் விளையாடும் சூப்பர் சீரிஸ் தொடருக்கு வலுவான எதிர்ப்பு எழுந்துள்ளது.

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி அறிவுறுத்திய இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தரவரிசையில் டாப்பில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு அணியை இணைத்து சூப்பர் சீரிஸ் எனும் தொடரை நடத்தவேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஒத்துக்கொண்டுள்ள நிலையில் ஆஸ்திரேலியாவிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர்.

ஏற்கனவே ஐசிசியில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வாரியங்கள் ஆதிக்கம் செலுத்தும் வருவதாக மற்ற நாடுகள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் உட்பட பலரும் இதற்கு எதிர்ப்புகள் தெரிவித்துள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :