செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 5 பிப்ரவரி 2022 (10:42 IST)

அடுத்த ஆண்டு முதல் பெண்கள் அணிக்கு தனி ஐபிஎல்… கங்குலி அறிவிப்பு!

இந்தியன் பிரிமீயர் லீக் என சொல்லப்படும் ஐபிஎல் தொடர் உலகளவில் பிரசித்தி பெற்ற டி 20 தொடர்களில் ஒன்றாக உள்ளது.

2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் ஆண்டு தோறும் மார்ச் முதல் மே வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டு வருகிறது. பணம் கொட்டும் தொடராக இருப்பதால் உலக நாடுகளின் வீரர்கள் அனைவரும் இதில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் ஆண்களுக்கான ஐபிஎல் போலவே பெண்களுக்கு தனியாக ஐபிஎல் தொடரை நடத்த உள்ளதாக பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.