ஒலிம்பிக் 2016 : ஜிம்னாஸ்டிக் வீரருக்கு கால் ஒடிந்த பரிதாபம் [வீடியோ]
ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தகுதி சுற்றில் பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீரர் ’சமீர் எய்ட் செட்’டின் இடது கால் முறிந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின் ஆண்களுக்கான தகுதி சுற்று நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரான்ஸ் நாட்டைச் சார்ந்த 26 வயதான வீரர் சமீர் எய்ட் செட் பங்கேற்றார்.
அவர், துரதிர்ஷ்டவசமாக தவறி விழுந்ததில் அவரின் இடதுகால் முறிந்தது. இதனால், வலியால் அவர் அலறினார். இதனையடுத்து ஊழியர்கள் அவரை உடனடியாக ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
விடியோ இங்கே: