வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2022 (15:51 IST)

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் வரிந்தர் சிங் காலமானார்

hockey
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் வரிந்தர் சிங் இன்று காலமானார்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் வரிந்தர் சிங். இவர் பஞ்சாப்பில் உள்ள ஜலந்தரில் வசித்து வந்தார்.

இந்திய ஹாக்கி அணியில் இடம்பிடித்த வரிந்தர் சிங்,  1972 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி, 1973 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டாம் உலகக்கோப்பையயில் இந்திய் அணியில் இடம்பிடித்திருந்தார்.

அதேபோல், 1975 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் உடம்  நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வரிந்தர் சிங்,  நேற்று காலையில் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு ஹாக்கி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.