கால்பந்து ஜாம்பவானின் மூன்றாவது திருமணம்
பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவானான பீலே மூன்றாவது முறையாக திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.
கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்த பீலே, சுமார் 1,363 கால்பந்தாட்டங்களில் 1,281 கோல் அடித்து சாதனை படைத்துள்ளார். மேலும், 1958, 1962 மற்றும் 1970 போன்ற ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகளில் பீலேவின் அணி வெற்றிபெற்றுள்ளது.
கால்பந்து உலகின் 'காட் பாதர்' என்றழைக்கப்படும் பீலே (75), கடந்த 1980-ம் ஆண்டு நியூயார்க்கில், தனது காதலியான மார்சியா சிபிலே 42 வயதான அவோக்கியை சந்தித்துள்ளார். ஆனால் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் நெருக்கமாக பழக தொடங்கினார்கள். தொழில்முனைவரான அவோக்கி ஜப்பானை பூர்விகமாக கொண்டவர். இந்நிலையில், பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவானான பீலே மூன்றாவது முறையாக மார்சியா சிபிலே அவோக்கியை வருகிற செவ்வாய்க்கிழமை திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறார்.
இதற்கு முன்னதாக பீலே, ரோஸ்மேரி சோல்பியை மணந்துக் கொண்டார். இவர்களுக்கு எடினோ, ஜெனிபர், கெல்லி எனும் மூன்று குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, அஸ்ரியா நாஸ்கிமெண்டோவை திருமணம் செய்து கொண்ட பீலே, அவர் மூலம் ஜோஷுவா, செலேஸ்டி எனும் இரட்டைக் குழந்தைகளை பெற்றார்.