ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (23:43 IST)

சாம்பியன்ஷிப் கோப்பை: இங்கிலாந்திடம் சரண் அடைந்த நியூசிலாந்து

இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் சாம்பியன்ஷிப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டான்ஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது



 


இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி 49.3 ஓவர்களில் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 311 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஞ்சி 4வது பந்தில் போல்ட் ஆனார். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுக்கள் விழுந்து கொண்டே இருந்ததால் 44.3 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் வில்லியம்சன் மட்டும் ஓரளவு நிலைத்து ஆடி 87 ரன்கள் எடுத்தார்.

எனவே நியூசிலாந்து அணி 87 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் அபாரமாக ப்ந்துவீசிய இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜே.டி.பால், ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.