செவ்வாய், 18 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (10:56 IST)

ஆஷஷ் தொடர்: 3வது போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பு இங்கிலாந்து!

ஆஷஷ் தொடர்: 3வது போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பு இங்கிலாந்து!
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக வெற்றி பெற்ற நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியுள்ளது
 
இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இங்கிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 56 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
 
கடந்த இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய இங்கிலாந்து அணி இன்றைய போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பிய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது