செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sasikala
Last Updated : சனி, 8 ஜூலை 2017 (18:27 IST)

தோனி செல்ல மகளுடன் வைரலாகும் புகைப்படம்!

கிரிக்கெட் வீரர் தோனி பிறந்தநாளை வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியுடன் சிறப்பாக கொண்டாடினார். 36 வது பிறந்தநாளை கொண்டாடிய தோனி அவரது செல்ல மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

 
இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்த தோனி நேற்று தனது 36வது பிறந்தநாளை கொண்டாடினார். உலகெங்கிலும் உள்ள தோனியின் ரசிகர்கள் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இந்திய அணியின் சக வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

 
தோனியின் மகள் மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி அருகில் இருந்து பார்த்து மகிழ்ந்தனர். இந்திய வீரர்கள் பலரும் தோனியுடன்  செல்ஃபி எடுத்து கொண்டனர். தோனி அவரது செல்ல மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.