இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனியின் மோசமான அரை சத சாதனை!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 3 ஜூலை 2017 (17:46 IST)
முன்னாள் இந்திய கேப்டன் தோனி தனது கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அரை சதம் அடிப்பதில் மோசமான சாதனையை படைத்துள்ளார்.

 
 
இந்தியா- மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நடந்த நான்கவது ஒரு நாள் போட்டியில், தோனி 108 பந்துகளை சந்தித்து அரை சதத்தை கடந்தார். இது தோனியின் மோசமான அரை சதமாகும். அதாவது தோனியின் 16 வருட கிரிக்கெட் வரலாற்றில் வேகம் குறைந்த அரை சதமாக இது கருதப்படுகிறது. 
 
ஆனால், இந்த போட்டியில் துவக்க வீரக்கள் பிட்ச்சை சமாளிக்க முடியாமல் அவுட் ஆன நிலையில், தோனியின் அரை சதம் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. 
 
இது குறித்து கோலி கூறியதாவது, பந்தின் வேகம் வழக்கத்தைவிட கணிக்க முடியாத வேகத்தில் இருந்தது. போட்டியில் தோனி தாக்குப்பிடித்ததே பெரிய விஷயம்தான். தோனி பிட்சின் தன்மையை நன்கு கணித்து சமாளித்து ஆடிவிட்டார். ஆனால் அதற்கான பலன்தான் எதிர்பார்த்தபடி இல்லை என கூறினார்.
 


இதில் மேலும் படிக்கவும் :