திங்கள், 24 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 23 பிப்ரவரி 2017 (20:29 IST)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 256/9

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று புனேவில் தொடங்கியது. 


 
 
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். 
 
மதிய உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித், ஷேன் மார்ஷ் ஆகியோர் களத்தில் இருந்தனர்.
 
மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 16 ரன்கள் எடுத்த நிலையில் ஷேன் மார்ஷ் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹேண்ட்ஸ்காம்ப் 22 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ஸ்மித் 27 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டம் இழந்தார்.
 
உடல்நலக் கோளாறால் வெளியேறிய ரென்ஷா மீண்டும் களம் இறங்கினார். ரென்ஷா 125 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். 
 
ஆஸ்திரேலிய வி்க்கெட் கீப்பர் வடே 8 ரன்னில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். ரென்ஷா 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஓ'கீபே, லயன் ஆகியோரை டக் அவுட்டில் வெளியேற்றினார்கள். 
 
ஆஸ்திரேலியா அணி 205 ரன்கள் எடுப்பதற்குள் 9 விக்கெட்டுக்களை இழந்தது. 10-வது விக்கெட்டுக்கு ஸ்டார்க் உடன் ஹசில்வுட் ஜோடி சேர்ந்தார். 
 
ஸ்டார்க் அவ்வப்போது பவுண்டரியும், சிக்சரும் விளாசினார். 47 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதனால் முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.