1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 3 பிப்ரவரி 2024 (13:57 IST)

Tissue பேப்பரில் மெஸ்ஸி உடனான முதல் ஒப்பந்தம் ஏலம் !

messi- barcelona agreement
மெஸ்ஸி பார்சிலோனா கிளப்புடன் செய்து கொண்ட முதல் ஒப்பந்ததாள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கால்பந்து விளையாட்டின் முன்னணி வீரராக திகழ்பவர் அர்ஜெண்டினாவை சேர்ந்த மெஸ்ஸி. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி நீண்ட வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது.

இவர், பார்சிலோனா அணியிலும், பிஎஸ்ஜி அணியிலும் விளையாடிய நிலையில்,  தற்போது அமெரிக்கா இண்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில், மெஸ்ஸி பார்சிலோனா கிளப்புடன் செய்து கொண்ட முதல் ஒப்பந்ததாள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பார்சிலோனா கிளப்புடன் மெஸ்ஸி செய்துகொண்ட முதல் ஒப்பந்ததாள் Bonhams British Auction House நடத்தும் ஏலத்தில் ஏலம் விடப்படவுள்ளது.

உணவு சாப்பிடும்போது இந்த ஏலம் கையெழுத்தானதால், Tissue பேப்பரில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.3.14 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.