1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்
Last Updated : புதன், 23 செப்டம்பர் 2015 (10:02 IST)

தமிழ் சினிமாவை காப்பாற்றிய நயன்தாராக்கள்

இந்த வருடம் தமிழில் வெளியான படங்களில் பத்து சதவீதம்கூட வெற்றி பெறவில்லை.
 
நஷ்டக் கணக்குகளால் கோடம்பாக்கம் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் நயன்தாராவின் படங்கள் திரைத்துறை வர்த்தகத்தில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.


 

 
நயன்தாரா நடித்த தனி ஒருவன் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் 5.64 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. மொத்த வசூல் 70 கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.
 
சென்ற வாரம் வெளியான நயன்தாராவின் மாயா திரைப்படமும் நல்ல வசூலை பெற்று வருகிறது. நயன்தாரா என்ற பெயரை மட்டும் நம்பி வெளியான இப்படம், முதல் மூன்று தினங்களில் சென்னையில் 86 லட்சங்களுக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. விஷாலின் பாயும் புலி படத்தின் ஓபனிங்கை மாயா தொட்டிருக்கிறது என்பதே ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.
 
இந்தப் படத்தை தயாரித்துள்ள எஸ்.ஆர்.பிரபு கூறும்போது,
மேலும் அடுத்தப் பக்கம்...

தமிழகத்தில் இப்படம் முதல் நான்கு தினங்களில் ஐந்தரை முதல் ஆறு கோடிகளை வசூலித்திருப்பதாகவும். இது அவர்களே எதிர்பார்க்காத வசூல் எனவும் தெரிவித்துள்ளார்.
 
மாயா, மயூரி என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகியுள்ளது. அங்கு நான்கு தினங்களில் விநியோகஸ்தர்கள் ஷேராக மட்டும் 2.75 கோடிகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் எந்த சின்ன பட்ஜெட் பேய் படமும் இப்படி வசூலித்ததில்லை.


 

 
நயன்தாரா நடித்த படங்கள்தான் இப்படியென்றால், அவரது பெயரில் வெளியான, த்ரிஷா இல்லனா நயன்தாராவும் வசூலில் சக்கைப்போடு போடுகிறது. சென்னையில் முதல் மூன்று தினங்களில் 96 லட்சங்களை குவித்துள்ளது இந்தப் படம்.
 
தமிழகத்தில் இப்படம் 30 கோடிகள்வரை வசூலிக்கும். விநியோகஸ்தர் ஷேராக மட்டும் 15 கோடிகள்வரை கிடைக்கும் என படத்தை விநியோகித்திருக்கும் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
 
நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்த திரையுலக வியாபாரம் நயன்தாராவால் லாபத்துக்கு வந்திருக்கிறது.
 
நயன்தாரா ராக்ஸ்.