1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 19 ஜூலை 2016 (10:55 IST)

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

சென்னை பாக்ஸ் ஆபிஸ்

5. ஜாக்சன் துரை
 
இந்த பேய் படம் சென்ற வார இறுதியில் 3.70 லட்சங்களை வசூலித்து ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை சென்னையில் இதன் வசூல் 1.59 கோடி.


 
 
4. அப்பா
 
சமுத்திரகனியின் அப்பா சென்ற வார இறுதியில் சென்னையில் 13.80 லட்சங்களை வசூலித்து நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 84.70 லட்சங்கள்.
 
3. சுல்தான் (இந்தி)
 
இந்திப் படமான சுல்தான் சென்ற வார இறுதியில் சென்னையில் 27.58 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் இதுவரையான சென்னை வசூல், 1.97 கோடி. 
 
2. ஐஸ் ஏஜ் - கொலிஷன் கோர்ஸ் (ஆங்கிலம்)
 
ஐஸ் ஏஜ் சீரிஸின் ஐந்தாவது பாகம் சென்ற வாரம் வெளியானது. வாரஇறுதியில் இப்படம் 67 லட்சங்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.


 
 
1. தில்லுக்கு துட்டு
 
சநதானம் நடித்துள்ள இந்த பேய் படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சென்ற வார இறுதியில் 1.07 கோடியை வசூலித்த இப்படம், இதுவரை சென்னையில் 3.35 கோடிகளை தனதாக்கியுள்ளது.