1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. க‌ட்டுரை
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2017 (12:12 IST)

2017 எதிர்பார்ப்புக்குரிய தமிழ்ப் படங்கள்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா மிகுந்த எதிர்பார்ப்புடனே தொடங்குகிறது. ஆண்டு இறுதியில் எதிர்பார்ப்பு நிறைவேறாத  வெறுமை, கவலை. இந்த வருடம் தமிழ் சினிமாவுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பது ஒருபுறம் இருக்க, இந்த வருடத்தின் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்களைப் பார்ப்போம்.

 
10. நெஞ்சம் மறப்பதில்லை
 
செல்வராகவன், யுவன் மீண்டும் இணைந்திருக்கும் படம். எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக தனி நாயகனாக நடித்துள்ள படம்.  செல்வராகவன் இயக்கியிருக்கும் முதல் பேய் படம். இந்த மூன்று காரணங்களால் இந்தப் படத்துக்கு இன்டஸ்ட்ரியில்  எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
9. மோகன்ராஜா, சிவகார்த்திகேயன் இணையும் படம்
 
சிவகார்த்திகேயன் படங்கள் 35 கோடிகளுக்கு மேல் வியாபாரம் ஆகின்றன. அவர் மோகன் ராஜாவுடன் இணைவதால் எதிர்பார்ப்பு  இன்னும் எகிறியிருக்கிறது. விஜய், அஜித் படங்களுக்கு நிகராக இவர்கள் இணையும் படத்துக்கும் பணத்தை அளித்தர  விநியோகஸ்தர்கள் தயாராக உள்ளனர்.
 
8. என்னை நோக்கி பாயும் தோட்டா
 
கௌதம் இயக்கத்தில் தனுஷ். இந்த காம்பினேஷன் ஒன்றே இந்தப் படத்தின் எதிர்பார்ப்பு. பிப்ரவரியில் வெளியாவதாக இருந்த  படம் இப்போது மே இறுதி அல்லது ஜுன் ஆரம்பத்துக்கு தள்ளிப் போயிருப்பது சின்ன பின்னடைவு.
 
7. பைரவா

 
பொங்கலை முன்னிட்டு வரும் 12 படம் வெளியாகிறது. விஜய் படம் என்ற ஒன்றே பைரவாவின் அனைத்து பலமும். முந்தைய  படம் தெறிக்கவிட்டதால் பைரவாவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
 
6. எஸ் 3
 
ஹரி - சூர்யா கூட்டணியின் சிங்கம் படம் எந்திரன் உள்ளிட்ட எந்தப் படத்தையும்விட அதிக லாபத்தை  விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் சம்பாதித்து தந்தது. சிங்கம் 2 படமும் லாபம். சிங்கம் படத்தின்  மூன்றாவது பாகம் எஸ் 3 -க்கு விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
 
5. காற்று வெளியிடை
 
எத்தனை தோல்விக் தந்தாலும் மணிரத்னம் படம் என்றால் எதிர்பார்ப்பு இருக்கவே செய்யும். மணிரத்னம், ரஹ்மான், கார்த்தி  என்ற இந்த கூட்டணியை பார்க்க ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். மார்ச்சில் படம் திரைக்கு வருகிறது.
 
4. சபாஷ் நாயுடு
 
கமலுக்கு ஏற்பட்ட விபத்தால் சபாஷ் நாயுடு படத்தின் வேலைகள் தொடங்கப்படாமல் உள்ளன. ஒருமுறை தொடங்கிவிட்டால்  சபாஷ் நாயுடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. சென்ற வருடமும் கமல் படம்  வெளியாகாததால் சபாஷ் நாயுடுவை காண ரசிகர்கள் பொறுமையின்றி உள்ளனர்.
 
3. பாகுபலி 2
 
ஏப்ரலில் வெளிவரும் பாகுபலி 2, பாகுபலியின் வசூலை முறியடிக்குமா, தங்கலை புரட்டிப் போடுமா என்பதுதான் எதிர்பார்ப்பே  தவிர, படம் பார்க்கிற மாதிரி இருக்குமா, வெற்றி பெறுமா என்றெல்லாம் யாரும் யோசிக்கவில்லை. பாகுபலி 2 நம்ம படம் என்ற  கெத்துடன் வெளியாகவிருக்கிறது.
 
2. 2.0

 
ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் இரண்டாம் பாகத்தில் ரஜினி. லைக்காவின் 400 கோடி பட்ஜெட். இதைவிட இந்தப் படத்தை  எதிர்பார்க்க எதுவும் தேவையில்லை. இந்த வருடத்தின் மோஸ்ட் வான்டட் லிஸ்டில் முன்னிலையில் உள்ளது 2.0.
 
1. அநீதிக்கதைகள்
 
ஆரண்யகாண்டம் தியாகராஜன் குமாரராஜா விஜய் சேதுபதி, சமந்தாவை வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார். அநீதிக்கதைகள்  என்று அவர் படத்துக்கு பெயர் வைத்திருப்பதாக கேள்வி. பெயர் மாற்றி வைக்கப்பட வாய்ப்புள்ளது. ரசிகர்கள், திரையுலகினர்,  விமர்சகர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் இந்தப் படத்தைதான் உற்று நோக்கி வருகின்றனர். சந்தேகமில்லாமல் இந்த  வருடத்தில் எதிர்பார்ப்புக்குரிய படம் தியாகராஜன் குமாரராஜாவுடையதுதான்.
 
இவை தவிர புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவாகும் விக்ரம் வேதா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும்  தானா சேர்ந்த கூட்டம், சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன், சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் கார்த்தி  நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று என மேலும் பல படங்கள் இந்த வருட தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரியனவாக உள்ளன.
 
இதில் எத்தனை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்கின்றன என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.